நடப்பு கல்வியாண்டு முதல் + 1 பொதுத்தேர்வு ரத்து!

M K Stalin Tamil nadu Anbil Mahesh Poyyamozhi Education
By Sumathi Aug 08, 2025 10:20 AM GMT
Report

நடப்பு கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு ரத்து 

தமிழ்நாட்டிற்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க அரசு முடிவு செய்தது. அதன்படி 2022ம் ஆண்டு ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில், 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டு முதல் + 1 பொதுத்தேர்வு ரத்து! | Plus 1 Exam Cancelled All Pass Tamilnadu Details

தொடர்ந்து இக்குழு துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, புதிய மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்துள்ளனர்.

கூட்டம் கூடுவதெல்லாம் விஷயமல்ல; 11வது முறையும் தோல்விதான் - அதிமுகவை சீண்டிய செந்தில் பாலாஜி!

கூட்டம் கூடுவதெல்லாம் விஷயமல்ல; 11வது முறையும் தோல்விதான் - அதிமுகவை சீண்டிய செந்தில் பாலாஜி!

அரசு அறிவிப்பு

650 பக்கங்கள் கொண்ட மாநில கல்விக்கொள்கை வரைவு அறிக்கை டந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அந்த அறிக்கை மாநில அரசிடம் சமர்பிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய மாநிலக் கல்விக்கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

anbil mahesh poyyamozhi

பின் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி தமிழ் , ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கையே கடைபிடிக்கப்படும் என்றும், 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி நடைமுறை தொடரும்.

நடப்பு கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.