புழல் சிறையில் செந்தில் பாலாஜி எப்படியிருக்கிறார்? சிறைத்துறை டிஐஜி ஷாக் தகவல்!

By Jiyath Oct 27, 2023 03:21 AM GMT
Report

புழல் சிறையில் செந்தில் பாலாஜி எப்பாடியிருக்கிறார் என்பது குறித்து சிறைத்துறை டிஐஜி கனகராஜ் தெரிவித்துள்ளார். 

செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு , புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

புழல் சிறையில் செந்தில் பாலாஜி எப்படியிருக்கிறார்? சிறைத்துறை டிஐஜி ஷாக் தகவல்! | How Is Senthil Balaji In Puzhal Prison Dig

இதனையடுத்து மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் பலமுறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த 10ம் தேதி செந்தில் பாலாஜிக்கு சிறையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

உடனடியாக அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து உடல்நிலையை காரணம் காட்டி கடந்த 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சிறையில் எப்படி இருக்கிறார்?

இந்த வழக்கு கடந்த 19ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

புழல் சிறையில் செந்தில் பாலாஜி எப்படியிருக்கிறார்? சிறைத்துறை டிஐஜி ஷாக் தகவல்! | How Is Senthil Balaji In Puzhal Prison Dig

மேலும், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என்றும் அவரது சகோதரர் இன்னும் தலைமறைவாக இருக்கும் நிலையில் ஜாமின் வழங்க இயலாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் செந்தில் பாலாஜி. அவர் தாக்கல் செய்த மனு வரும் 30ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

இந்நிலையில் புழல் சிறையில் செந்தில் பாலாஜி எப்பாடியிருக்கிறார் என்பது குறித்து சிறைத்துறை டிஐஜி கனகராஜ் கூறியிருப்பதாவது "செந்தில் பாலாஜி மன அழுத்தத்தில் உள்ளார். அவரது உடல் எடை குறைந்துள்ளது. சிறையில் நூலகத்தில் அவர் நேரத்தை செலவிடுகிறார். செந்தில் பாலாஜிக்கு தேவைப்படும் போது மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றன" என தெரிவித்துள்ளார்.