11 கோடிக்கு வித்து...7 கோடி'ய ஏமாத்துன அழகப்பன்?? கவுதமியிடம் சிக்கியது எப்படி??
நடிகை கவுதமி குறித்து இன்று காலை முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருவதற்கு முக்கிய காரணம் அழகப்பன்.
பாஜகவில் இருந்து விலகல்
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் தமிழக பாஜகவில் உறுப்பினராக இருந்து வந்த நடிகை கவுதமி இன்று கட்சியில் இருந்து விலகியுள்ளார். காலை முதலே இந்த சம்பவம் பெரும் விவாத பொருளாக இருக்கும் நிலையில், அதற்கு முக்கிய காரணமாக அழகப்பன் என்பவர் உள்ளார்.
இந்த அழகப்பன் கவுதமியின் குடும்ப நண்பர். தன்னை ஏமாற்றிய அழகப்பனை பாஜகவினர் சிலர் காப்பாற்றுவதாக கூறி தான் கவுதமி கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
எப்படி - என்ன ஏமாற்றி, எவ்வாறு சிக்கினார்
அழகப்பன் என்பதை தெளிவாக காணலாம். கடந்த 2015-ஆம் ஆண்டு திருவள்ளூர் கோட்டையூரில் அமைந்துள்ள 8.16 ஏக்கர் நிலத்தை வித்து தருமாறு அழகப்பனிடம் தெரிவித்துள்ளார்.
அதன் படி அழகப்பன் கூறியதன் பேரில் செங்கல்பட்டு மகேந்திர சிட்டி பகுதியை சேர்ந்த ரகுநாதன் மற்றும் சென்னை அந்நகரை சேர்ந்த பலராம் ஆகியோருக்கு கவுதமி பொது ஆவணம் எழுதி கொடுத்துள்ளார் கவுதமி.
7 கோடி'யை சுருட்டிய அழகப்பன்
அதனை தொடர்ந்து, இடத்தை வாங்க தனியார் நிறுவனம் விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதில் வில்லங்கம் இருக்கும் காரணத்தால் 4.10 கோடி ரூபாய்க்கு நிலத்தை விற்று விட்டதாக கூறி 2 தவணையாக அந்த பணத்தை கௌதமியிடம் கொடுத்துவிட்டு கையெழுத்து பெற்றுள்ளனர் அந்த மூவர்.
இதனையடுத்து, 2021ஆம் ஆண்டு கௌதமிக்கு வருமானவரித்துறையில் இருந்து வந்த கடிதத்தில் நிலம் 11.37 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாகவும், ஆனால் அதற்கான கேப்பிட்டல் கெயின் வரியான 2.61 கோடியை செலுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பின்னர் தான் தனக்கு வெறும் 4.10 கோடி ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு, 11.37 கோடிக்கு நிலத்தை விற்ற நிலையில் மீதமிருக்கும் தொகையை அழகப்பன் மற்ற மூவர் பிரித்து எடுத்துக் கொண்டது தெரியவந்ததுள்ளது.
அதனை தொடர்ந்து இது சம்பவங்கள் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கவுதமி புகார் அளித்துள்ள நிலையில் அழகப்பன், அவரின் மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதிஷ்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.