திறமையற்ற பா.ஜ.க தலைவர்களுக்கே பெருமை சேரும்!! கவுதமி விவகாரம்!! காயத்ரி ரகுராம் காட்டம்!!

Gautami BJP Gayathri Raghuram
By Karthick Oct 23, 2023 09:50 AM GMT
Report

இன்று பாஜகவில் இருந்து நடிகை கவுதமி விலகிய நிலையில், அதனை குறித்து நடிகையும், முன்னாள் உறுப்பினருமான காயத்ரி ரகுராம் கட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

கவுதமி விலகல் 

பிரபல நடிகையாக 90 முதல் தற்போது வரை விளங்கி வரும் நடிகை கவுதமி பாஜகவில் 25 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்து தற்போது வெளியேறியுள்ளார். அது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தனக்கு கட்சியில் எந்தவித ஆதரவு இல்லை என்றும் கட்சியில் தன்னை நபர் ஒருவர் பல காலமாக ஏமாற்றினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திறமையற்ற பா.ஜ.க தலைவர்களுக்கே பெருமை சேரும்!! கவுதமி விவகாரம்!! காயத்ரி ரகுராம் காட்டம்!! | Gayathri Raguramm Slams Bjp Inm Gautami Issue

இந்நிலையில், கவுதமியின் விலகல் குறித்து பாஜகவின் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் இந்த சம்பவங்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.   

தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ள அவர், திறமையற்ற பா.ஜ.க தலைவர்களுக்கே பெருமை சேரும். அந்த குண்டர்கள், பண மோசடி செய்பவர்கள் மற்றும் பாஜக பெண் உறுப்பினர்களை அவமரியாதை செய்பவர்களை கண்டிக்கவும். பேராசிரியர் சீனிவாசன் போன்ற அவர்களின் காலை தந்தி டிவி நேர்காணலைப் பாருங்கள், கவுதமி மேடத்தைப் பற்றி அவர் எப்படி பேசினார் என்று பாருங்கள். பேராசிரியர் சீனிவாசன் மீதான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களில் பாருங்கள், அவர் எப்போது பாஜகவில் சேர்ந்தார், அவருக்கு எப்படி பதவி கிடைத்தது என்று கேட்கலாமா? குறிப்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் நிர்வாக உறுப்பினராக நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.