என் தலையில் அடிக்க அவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? கொந்தளித்த கோலி!

Swetha
in கிரிக்கெட்Report this article
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சனுக்கு விராட் கோலி கொடுத்த பதிலலடி.
கொந்தளித்த கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி ஏராளமான சாதனைகளை முறியடித்துள்ளார். டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் எதிர் அணிகளை விளாசுவார். இதுவரை 26,000+ ரன்கள், 80 சதங்கள் அடித்து சாதனை நாயகனாக திகழ்கிறார்.
களத்தில் இவரது ஆக்ரோஷமான செயலுக்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.எதிரணியின் சீண்டலுக்கு அசராமல் பதிலடி தருவார். அந்த வகையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கினார்.
ஆனால் அந்த போட்டியில் முதல் பந்தே கோலிக்கு மிட்செல் ஜான்சன் பவுன்சராக வீசினார். அத்தனையோ சரியாக கவனிக்க தவறி கோலியின் தலையில் அடி வாங்கி கீழே விழுந்தார். இருப்பினும் அதற்கு பதிலடி கொடுக்க கோலி அபாரமாக விளையாடி கடைசியில் சதமடித்து கொண்டாடினார். இந்த நிகழ்வை குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசினார்.
எவ்வளவு தைரியம்
அப்போது,அந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியின் முதல் பந்திலேயே ஜான்சன் என்னுடைய தலையில் அடித்தார். அதை என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. அந்த தொடரில் இப்படி விளையாடுவோம் அப்படி பேட்டிங் செய்வோம் என்று 2 மாதங்களாக நான் கனவு கண்டு வைத்திருந்தேன்.
ஆனால் முதல் பந்திலேயே தலையில் அடி வாங்கியதால் என்னுடைய மொத்த திட்டத்தையும் மாற்றினேன். அந்த அடியால் எனது இடது கண் வீங்க தொடங்கியதால் பார்வை குறைய துவங்கியது. அதை நான் அப்போது கவனிக்கவில்லை. இருப்பினும் உணவு இடைவெளிக்கு முன் அவ்வாறு நடந்ததற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்.
ஏனெனில் அதன் காரணமாக சண்டையிட வேண்டும் அல்லது விமானத்தில் வீடு திரும்ப வேண்டும் என்ற 2 விருப்பங்கள் மட்டுமே என்னிடம் இருந்தன. அப்போது எனக்கு, "என் தலையில் அடிக்க அவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? இவரை நான் அடித்து நொறுக்குவேன்" என்பதே என்னுடைய ரியாக்சனாக இருந்தது. கடைசியில் அதையே செய்தேன் என்று கூறியுள்ளார்.