பணம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி; கணவரால் எப்படி வாழ முடியும்? நீதிபதி சரமாரி கேள்வி!

Viral Video Karnataka India Divorce
By Swetha Sep 02, 2024 12:00 PM GMT
Report

கணவரிடம் பராமரிப்பு பணம் கேட்டு மனைவி வழக்கு தொடர்ந்ததற்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மனைவி

கர்நாடகாவில் விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவரிடம் இருந்து பராமரிப்புச் செலவுக்குப் பணம் கோரி மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

பணம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி; கணவரால் எப்படி வாழ முடியும்? நீதிபதி சரமாரி கேள்வி! | How Can He Survive Judge Question Wife Viral Video

அதாவது, மாதம் ரூ.12,000 சம்பளம் வாங்கும் கணவன் குழந்தை பராமரிப்பு செலவாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

21 ஆண்டு மண வாழ்க்கை; 21 நிமிடங்களில் தம்பதிக்கு தவறாக விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!

21 ஆண்டு மண வாழ்க்கை; 21 நிமிடங்களில் தம்பதிக்கு தவறாக விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!

நீதிபதி கேள்வி

அப்போது கணவன் ரூ.12,000 மட்டுமே சம்பளம் வாங்குவதை பற்றி அறிந்த நீதிபதி, உங்களுக்கு ரூ.10,000 கொடுத்துவிட நீதிமன்றம் உத்தரவிட்டால் அவரால் எப்படி வாழ முடியும்?என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கணவரின் ஊதியம் அதிகரித்தால், குழந்தை பராமரிப்பு செலவை அதிகரிக்கக்கோரி மனைவி மற்றொரு வழக்கு தொடரலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.