ரேசன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கிடையாது? - வெளியான முக்கிய தகவல்
புதுவையில் குடும்ப தலைவிகளுக்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் அடுத்த மாதம் இந்த உதவித்தொகை கிடைக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை
புதுவை மாநிலத்தில் அரசின் எந்தவொரு நலத்திட்ட உதவிகளையும் பெறாத வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று புதுவை பட்ஜெட் தாக்கலின் போது முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

இத்திட்டம் கடந்த ஜனவரி மாதம் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்ததராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் பெண்கள் பயனடைவார்கள் என்றும் முதல் கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இப்போது கிடையாது?
அதன் படி கடந்த பிப்ரவரி மாதம் ரூ.5 கோடி ரூபாய் செலவில் தகுதிப்பெற்ற 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த உதவித்தொகை திட்டம் குறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கோப்பிற்கு தலைமைச் செயலாளர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் வரவிருக்கும் மே மாதம் ரூ.1000 உதவித்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.