வீட்டில் பணிப்பெண் செய்த செயல்; மிரண்ட குடும்பத்தினர் - ஷாக் வீடியோ!
வீட்டு வேலை செய்யும்போது பணிப்பெண் செய்த செயல் குறித்த வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணிப்பெண் செய்த செயல்
உத்தரப் பிரதேசம், காஜியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஒருவர் சிறுநீரைப் பயன்படுத்தி மாவை பிசையும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிராசிங்ஸ் ரிபப்ளிக் சொசைட்டியில் உள்ள அந்த குடும்பத்தினருக்கு தொடர்ச்சியாக கல்லீரல் பிரச்சனைகளை அனுபவித்து வந்துள்ளனர். எவ்வளவு மருந்து மாத்திரைகள் எடுத்தும் கூட குணமடையாமல் இருந்துள்ளனர்.
அதிர்ச்சி வீடியோ
எனவே, தன்னுடைய வீட்டு உதவியாளரால் தயாரிக்கப்படும் உணவில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால், சமையலறையில் மொபைல் கேமராவை வைத்துள்ளனர். அதில், சமையலறையின் கதவை அந்த பணிப்பெண் மூடுகிறார்.
गाजियाबाद में घरेलू नौकरानी रीना मूत्र में आटा गूंथकर बनाकर खिलाती थी रोटियां , मालिक लोग उसको घर का टॉयलेट इस्तेमाल नहीं करने देते थे ,,, #Ghaziabad #यूपी pic.twitter.com/u5PgXa6iag
— TANVIR RANGREZ (@virjust18) October 16, 2024
பின்னர் அவர் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கிறார். மேலும் அவர் தனது சிறுநீரை பயன்படுத்தி மாவை பிசைந்து தொழிலதிபர் குடும்பத்திற்கு ரொட்டி தயாரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் விசாரணையின்போது மாவில் சிறுநீரைக் கலக்கவில்லை என வீட்டுப் பணிப்பெண் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 வருடங்களாக தொழிலதிபர் குடும்பத்திற்காக அந்த பெண் வேலை பார்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.