சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை - இன்று முதல் அமல்!
சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இலவச டயாலிசிஸ்
அரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 2வது முறையாக, அம்மாநில முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.

இந்நிலையில், அங்குள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் நான் கையெழுத்திட்ட முதல் கையெழுத்து, சிறுநீரக நோயாளிகள் தொடர்பானது.

அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம்.
டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, அரியானா அரசு அந்த செலவை ஏற்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan