நள்ளிரவில் திடீரென பற்றி எறிந்த வீடு - உயிரை காப்பாற்றிய நாய்!
திடீரென நள்ளிரவில் வீடு பற்றி எறிந்ததில் உரிமையாளர்களின் உயிரை அவரது நாய் காப்பாற்றிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து
பிரிட்டனின் எஸ்செக்ஸ் கவுண்டி என்னும் பகுதியில் உள்ள டன்மாவ் சாலையின் அருகில் ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது.
அது வீடு முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. அந்த வீட்டில் உள்ளவர்கள் நன்கு உறங்கி கொண்டிருந்தார்கள்.
அதனால் அவர்கள் நெருப்பில் சிக்கி இறப்பதற்கான வாய்ப்பு இருந்தது. அப்பொழுது அவர்கள் வளர்த்த நாய்கள் அங்கும் இங்கும் ஒட்டியபடி சத்தம் போட்டு குறைக்க தொடங்கியது.
தொடர்ந்து அந்த நாய்கள் இடைவிடாமல் குறைத்ததால், சத்தம் கேட்டு உரிமையாளர்கள் எழுந்தனர்.
விசாரணை
இந்நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் தீப்பிடித்து எரிவதை அறிந்து உடனடியாக தன் மனைவியுடன் வெளியேறினார்.
சிறிது நேரத்தில் வீட்டின் மேற்பகுதி கொழுந்துவிட்டு எரிந்து சாம்பலாகியது. சரியான சமயத்தில் நாய்கள் குரைத்ததால் வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.
பின்னர், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
வீட்டின் பின்பகுதியில் இருந்து தீ பரவியதாக தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்தார்.
அந்த வீடு கடுமையாக சேதமடைந்ததால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் அனைவரும் அந்த நாய்களை பாராட்டி வருகின்றனர்.