பிரிட்டனில் தோழிக்கு முத்தமிட்ட அமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார்!
பிரிட்டனின் சுகாதாரத் துறை செயலர் மேட் ஹான்காக். தன் தோழிக்கு முத்தமிட்டதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரிட்டனின் பிரபல நாளிதழான சன் இதழ் கடந்த ஆண்டு ஒரு செய்தி வெளியிட்டது. அதில் பிரிட்டனின் சுகாதாரத் துறை செயலர் மேட் ஹான்காக் தனது தோழி ஒருவரை முத்தமிடும் படத்தை செய்தியாக வெளியிட்டிருந்தது.
வெளி நாடுகளில் முத்தம் கொடுப்பது சகஜம்தானே என நீங்கள் கருதலாம் ஆனால் அப்போது பிரிட்டனில் அப்போது தீவிரமாக கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு மற்றும் சமூக விலகல் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது.
ஊரடங்கினை மீறுவோருக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. போரிஸ் ஜான்சன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிரசிகிச்சைக்கு பிறகு மீண்டார் இது நாம் அறிந்ததே.
ஆகவே இவ்வாறு கடும் ஊரடங்கு தீவிர சமூக இடைவெளியினை மக்கள் கடைபிடிக்கும் போது நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தனது தோழியை இவ்வாறு முத்தமிட்டு சட்டத்தை மீறியதால் அவருக்கு எதிராக போர்கொடிஉயர்த்தினர் எதிர் கட்சியினர்.பிரிட்டனின் பல்வேறு ஊடகங்களிலும் இந்த நிகழ்வு பேசு பொருளானது.
இந்த நிலையில் தற்போது பிரிட்டனில் வைரஸ் தாக்கம் அறவே இல்லாத நிலையில் கடந்தாண்டு தான் செய்த தவறுக்காகவும் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோதும் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்ததற்காக மேட் ஹான்காக் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனாலும் மன்னிபு கேட்க ஒரு வருடம் எதற்காக எடுத்துக்கொண்டார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.