சிக்கன் ரைஸ் வர லேட்; நொறுக்கப்பட்ட ஹோட்டல் - காசாளர் மண்டை உடைப்பு!
பிரைட் ரைஸ் தர தாமதமானதால் உணவகம் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரைட் ரைஸ் லேட்
திருப்பூர், வீரபாண்டி காவல் நிலையம் அருகே பெப்சி என்ற தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த கெளதம் என்பவர் சாப்பிட வந்துள்ளார்.

அவர் ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்து காத்திருந்ததாகவும், அவருக்குப் பின்னால் வந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட நிலையில் கெளதமுக்கு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
உணவகம் உடைப்பு
இதனால் கோபமடைந்த கெளதம் நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக அங்கு வருமாறு அழைத்து கணக்காளர் ஜாகீர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தினார். உணவகத்தில் இருந்த கண்ணாடிப் பொருட்கள், நாற்காலிகள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தினர்.

பின் தகவலறி்ந்து விரைந்து வந்த போலீசார் கெளதமைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே, இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த கணக்காளர் ஜாகீர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மேலும், தப்பியோடிய 6 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.