இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மருத்துவமனை சேவை நிறுத்தம் - 3 குழந்தைகள் பலி!

Israel Death World Israel-Hamas War
By Jiyath Nov 13, 2023 04:59 AM GMT
Report

இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் காசாவில் மருத்துவமனை சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் 

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. வடக்கு காசாவில் அமைந்துள்ள பெரிய அல்-ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மருத்துவமனை சேவை நிறுத்தம் - 3 குழந்தைகள் பலி! | Hospital Services In Gaza Shutdown Israel Attacks

இதனால் அந்த மருத்துவமனையில் சேவை வழங்கப்படாததால், நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரலான, டாக்டர் முனீர் அல்-புர்ஷ் கூறியதாவது "இந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில், இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. இதில், குழந்தைகளுக்கான வார்டில் 3 குழந்தைகள் உயிரிழந்து விட்டன.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பிரபல இஸ்ரேலிய நடிகை அதிரடி கைது - என்ன காரணம்?

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பிரபல இஸ்ரேலிய நடிகை அதிரடி கைது - என்ன காரணம்?

தவிக்கும் நோயாளிகள்

இதனால், 36 குழந்தைகள் உள்ள இந்த பிரிவில் கைகளால் செயற்கை சுவாசம் அளிக்க மருத்துவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்" என கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மருத்துவமனை சேவை நிறுத்தம் - 3 குழந்தைகள் பலி! | Hospital Services In Gaza Shutdown Israel Attacks

மேலும் இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பினரால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான டாக்டர் அஷ்ரப் அல்-குவித்ரா கூறியதாவது "இந்த மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நாலாபுறமும் சுற்றி வளைத்து விட்டனர்.

400 பேர் சிகிச்சை பெறும் நிலையில், புலம்பெயர்ந்த 20 ஆயிரம் பேர் மருத்துவமனை வளாகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற முடியாமல் அவர் சிக்கி கொண்டார். ஐ.சி.யூ., ஆக்சிஜன் உபகணரங்கள் பணியை நிறுத்தி விட்டன" என குவித்ரா கூறியுள்ளார்.