பிரசவத்திற்கு போனதில் வயிற்றில் பஞ்சை வைத்து தைத்த அவலம் - பகீர்!

Pregnancy Bengaluru Crime
By Sumathi 2 மாதங்கள் முன்

பெண்ணின் வயிற்றில் சர்ஜிகல் மாப் வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவம்

கர்நாடகா, உடுப்பி பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான பெண். இவர் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சி-பிரிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தொடர்ந்து அந்தப் பெண் அடிவயிற்று வலியால் சிரமப்பட்டுள்ளார்.

பிரசவத்திற்கு போனதில் வயிற்றில் பஞ்சை வைத்து தைத்த அவலம் - பகீர்! | Hospital Leaves Surgical Mop In Abdomen Bengaluru

அதனையடுத்து, தனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களை பார்த்துள்ளனர். ஆனால் அங்கு அறுவை சிகிச்சைக்குப் பின்பு வரும் சாதாரண வலி எனக் கூறி அனுப்பியுள்ளார்கள். அந்தப் பெண் மற்றொரு மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, 2வது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சர்ஜிகல் மாப்

அதன்பிறகும் அந்தப் பெண்ணின் மார்பு பகுதியில் வலி இருந்துள்ளது. அதனால் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்குச் சிரமப்பட்டுள்ளார். அதன்பின், அவருடைய கணவர் ஆயுர்வேத நிபுணரை அணுகி எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துள்ளனர்.

அதில், அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சையின்போது சர்ஜிகல் மாப் (பஞ்சு) வைத்து தைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே 3வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சர்ஜிகல் மாப் வயிற்றிலிருந்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார்.

அதில், அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனை நஷ்ட ஈடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.