6ம் மாதத்திலேயே ஆப்ரேஷன் - மறுபடி குழந்தையை வயிற்றில் வைத்து தைத்த அவலம்!

Pregnancy Assam Crime
By Sumathi Sep 01, 2022 01:39 PM GMT
Report

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையை மருத்துவர் மீண்டும் வயிற்றில் வைத்து தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 குறைப் பிரசவம்

அசாம், கரீம்கஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென சிறு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனை பிரசவ வலி என நினைத்து,

6ம் மாதத்திலேயே ஆப்ரேஷன் - மறுபடி குழந்தையை வயிற்றில் வைத்து தைத்த அவலம்! | Assam S Karimganj As Baby Was Premature

அந்த பெண்ணுக்கு சிசேரியன் செய்துள்ளனர். வெளியே எடுத்ததில்தான் அக்குழந்தை குறைப் பிரசவத்தில் இருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து, அந்த குழந்தையை மீண்டும் பெண்ணின் வயிற்றுக்குள்ளேயே வைத்து மருத்துவர் தைத்துள்ளார்.

மீண்டும் வயிற்றில்.. 

மேலும், அந்த பெண்ணை தொடர்ந்து 11 நாட்கள் மருத்துவமனையிலேயே வைத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணை நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். வரும் டிச.9ஆம் தேதி தான் அந்த பெண்ணுக்கு பிரசவ தேதி கொடுத்து இருந்த நிலையில் திடீரென ஆப்ரேஷன் செய்ததை கண்டித்து மக்கள் மருத்துவமனைக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6ம் மாதத்திலேயே ஆப்ரேஷன் - மறுபடி குழந்தையை வயிற்றில் வைத்து தைத்த அவலம்! | Assam S Karimganj As Baby Was Premature

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மக்களை சமாதானம் செய்தனர். இது தொடர்பாக கரீம்கஞ்ச் போலீஸ் நிலைய பொறுப்பாளர் கூறுகையில், "நாங்கள் மருத்துவமனைக்கு வந்தோம், இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இரு தரப்பும் ஒரு சமரச முடிவை எட்டிவிட்டனர். இது குறித்து புகார் எதையும் அவர்கள் தரவில்லை" என்றார்.