மலையை அப்படியே உணவாக சாப்பிடும் ஊர் மக்கள்.. டேஸ்டா இருக்குமாம் - எங்கு தெரியுமா?
மலையை உணவாக சாப்பிடும் மக்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மலை
இயற்கை நம்மை அவ்வப்போது வியப்பில் ஆழ்த்துவது வழக்கமானது தான். அதன் அழகை பார்த்து வியக்காதவன் இருக்க முடியாது. அப்படி இயற்கையில் மிக முக்கியமான ஒன்று தான் மலை. இந்த உலகில் மலைகள் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
மிகவும் உறுதியாக இருக்கும் விஷயங்களை ”மலைப்போல்” என்று குறிப்பிடுவதுண்டு. மலைகளில் சிலது மிகவும் அழகாக இருக்கும். அவற்றை எதுவும் செய்ய முடியாது. அசைக்க முடியாது. அவை அப்படியே இருக்கும். சில சமயங்களில் அவற்றை உடைப்பது மிகவும் கடினம்.
ஆனால் இங்கு ஒரு தீவில் மக்கள் அனைவரும் மலையை உண்வாக உட்கொள்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடியுமா? இந்த இடம் ஒரு தீவு. இது ஜம்புத்வீபின் தென்மேற்குப் பகுதியில் ஈரான் கடற்கரைக்கு 8 கிலோமீட்டர் தொலைவில் பாரசீக வளைகுடாவின் நீல நீரின் நடுவில் அமைந்துள்ளது.
இந்த தீவின் பெயர் ஹார்முஸ் தீவு, இதை ரெயின்போ தீவு என்றும் அழைக்கிறார்கள். இதன் அழகை பற்றி கூற வார்த்தைகளே இல்லை. இந்த தீவை புவியியலாளர்களின் டிஸ்னிலேண்ட் என்றும் அழைக்கிறார்கள்.
ஏனென்றால் இங்குள்ள தங்கக் கால்வாய்கள், வண்ணமயமான மலைகள், அழகான உப்புச் சுரங்கங்கள் எனப் பல அழகுகள் நம் மனதை ஈர்க்கின்றன. வெறும் 42 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவு, வானத்திலிருந்து மிகவும் வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது.
எங்கு தெரியுமா?
இங்கு எரிமலைக் கற்கள், கல், மண், இரும்பு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் மின்னும்போது.. இது பூமியா அல்லது சொர்க்கமா என்று தோன்றுகிறது. இங்குள்ள கற்களில் சூரியக் கதிர்கள் படும்போது அவை மின்னுகின்றன. இந்த தீவில் 70க்கும் மேற்பட்ட வகையான தாதுக்கள் உள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த தீவு உருவானதாக கூறப்படுகிறது. எரிமலைக் கற்கள், தாதுக்கள், உப்பு மேடுகள் இந்த தீவை அழகாக்கியுள்ளன. இந்த தீவைப் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால். இங்குள்ள மலை உலகில் சாப்பிடக்கூடிய ஒரே மலை இதுவாகும்.
ஏனென்றால் இந்த மலைகள் தடிமனான உப்பு அடுக்குகளால் ஆனவை. பல்வேறு வகையான தாதுக்கள் காரணமாக இந்த தீவின் மண்ணும் காரமாக இருக்கும். இதை உணவில் மசாலாவாகப் பயன்படுத்துகிறார்கள்.
இங்குள்ள மக்கள் சிவப்பு மண்ணை சட்னியாகப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் உள்ளூர் கலைஞர்கள் இங்குள்ள சிவப்பு மண்ணை ஓவியத்தில் பயன்படுத்துகிறார்கள். மக்கள் தங்கள் துணிகளுக்கு வண்ணம் தீட்டபயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.