போர்ன்விட்டாவைத் தொடர்ந்து இனி.. ஹார்லிக்ஸ் - ஹெல்த் ட்ரிங்ஸ் கிடையாது!
ஹார்லிக்ஸ் ஹெல்த் ட்ரிங் என்ற அடையாளத்தை இழந்துள்ளது.
ஹெல்த் ட்ரிங்
ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்ற பல பிராண்டுகளைக் கொண்ட ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் அதன் பானங்களின் பெயரை 'Health Drinks' என்பதில் இருந்து
ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் எனப் பெயரிட்டுள்ளது. ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் என்பது புரதம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை பூர்த்தி செய்ய உதவும் பானங்களாகும்.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) ஒரு விசாரணையை அனுப்பியது. அதன் விளைவாக இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
ஹார்லிக்ஸ்
அதன்படி, ஹார்லிக்ஸ் பானத்தில் இருந்து ஹெல்த் ட்ரிங்க் என்ற பெயரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் நீக்கியுள்ளது. முன்னதாக போர்ன்விட்டா அந்த வரிசையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய உணவு சட்டங்களின் கீழ் ஹெல்த் ட்ரிங்க் என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை.
இது போன்ற தவறான சொற்களை லேபிள்களில் பயன்படுத்துவது, இந்த பானங்களின் நுகர்வோரை தவறாக வழிநடத்தக் கூடும் என்பதால் இத்தகைய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
மேலும் பல ஆரோக்கிய பானங்கள் இந்த வரிசையில் விரைவில் இணையும் என்றும் எதிர்பார்க்கலாம்.