சூப்பில் விரல்கள், தலை காணவில்லை - பிரபல மாடல் அழகி கொடூர கொலை
மாடல் அழகியின் உடல் உறுப்புகள் பிரிட்ஜில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாடல் அழகி
ஹாங்காங்கைச் சேர்ந்தவர் அபி சோய் (28). பேஷன் காட்சியில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். சமீபத்தில் எலி சாப் ஸ்பிரிங் சம்மர் 2023 ஹாட் கோச்சர் நிகழ்ச்சிக்காக புகைப்படம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இவர் காணாமல் போனதாக கடந்த 2 தினங்களாக தேடப்பட்டு வந்தார். இதுகுறித்து புகாரளித்த நிலையில், லுங் மெய் என்ற கடற்கரை கிராமத்தில் உள்ள சோயின் முன்னாள் மாமியார் வாடகைக்கு இருந்த வீட்டை போலீஸார் சோதனை செய்தனர்.
கொடூர கொலை
அதில், பிரிட்ஜில் அவரது இரு கால்களை கண்டுபிடித்தனர். வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப்பில் கை விரல்கள் உள்ளிட்ட உடல் பாகங்களை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக கூறிய காவல் ஆய்வாளர் ஆலன் சுங்,
“பாதிக்கப்பட்டவரை தேடும் முயற்சியில் அவரது உடல் பாகங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் அடையாள அட்டை, கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற பொருட்களும் அவர்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது தலை இன்னும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து அவரது மாமியார் உட்பட மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.