குடியிருப்பில் பயங்கர தீ; 36 பேர் பலி - 279 மாயமானதால் பதற்றம்!
பயங்கர தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து
ஹாங்காங் அருகே தாய் போ பகுதியிலுள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, தீ விபத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிலும், தீயணைப்பு வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும் 279 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 29 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
36 பேர் பலி
இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அந்த குடியிருப்பு வளாகத்தின் எட்டு குடியிருப்புகளில், ஏழு குடியிருப்புகளில் கடந்த சில மாதங்களாக பழுது பார்க்கும் பணி நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக மூங்கில் கட்டைகள் மற்றும் பச்சை வலைகள் போர்த்தப்பட்டிருந்தது. இந்த மூங்கிலில் பயன்படுத்தப்பட்ட ஸ்டைரோபோம் என்ற பொருளால் தீ வேகமாக பரவி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தொடர்ந்து இந்த விபத்து காரணமாக சுமார் 900 பேர் அருகிலுள்ள சமுதாயக் கூடங்களிலும், தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.