தன்பாலின ஈர்ப்பு: நண்பனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை - கடைசியில் அந்த வாய்ஸ்நோட்..
நண்பனைக் கொலைசெய்துவிட்டு, இன்ஜீனியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தன்பாலின ஈர்ப்பு
சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த லோகேஷ் (25) மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த வாஞ்சிநாதன் (27) இருவரும் நண்பர்கள். பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
வழக்கம் போல் வேலைக்கு சென்ற இருவரும் மீண்டும் வீட்டிற்கு வராததால் இருவரின் செல்போனிற்கு வீட்டார்கள் தொடர்புகொண்டுள்ளனர். சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்த வீட்டார் கவால்நிலையத்தில் புகாரளித்தனர். இதன் பேரில் வழக்கு பதிவுசெய்து போலீசார் இருவரையும் தேடி வந்துள்ளனர்.
விபரீத முடிவு
இந்நிலையில் வாஞ்சிநாதன் அக்கா காமாட்சிக்கு தான் தூக்கிட்டுக் கொல்வதாக வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், செல்போன் சிக்னலை வைத்து தேடியதில் அவர் பன்னீர் நகரில் உள்ள ஒரு விடுதியில் இருப்பது தெரியவந்தது.
விரைந்து வந்த போலீசார் அறையின் கதவு உட்புறமாக தாளிட்டிருந்ததை அறிந்து விடுதி ஊழியரின் உதவியுடன் கதவை திறந்து பார்த்தனர். அறையில் லோகேஷ் மற்றும் வாஞ்சிநாதன் இருவரும் இறந்த நிலையில் இருந்தனர். உடனே இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின் நடத்திய விசாரணையில், இருவரும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமல்லாமல் அதையும் தாண்டி தன்பாலின் ஈர்ப்பாளராக இருந்துள்ளனர்.
இதில் வாஞ்சிநாதனுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் இருவருக்கும் இடையே நடந்த தகராறில் லோகேஷின் கழுத்தை ஷூவின் லேஸால் நெரித்துக் கொலை செய்துவிட்டு வாஞ்சிநாதன், தூக்கிட்டு தற்கொலை செய்திருக்க வேண்டும் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.