7 நாட்களில் நரை முடியை கருப்பாக்கலாம்; ரொம்ப சிம்பிள் - இதை மட்டும் பண்ணுங்க..
இயற்கையான பொருட்களை கொண்டு வீட்டிலேயே ஹேர்டை செய்து தலைமுடியை கருப்பாக மாற்றலாம்.
பாதாம் ஹேர்டை
தலைமுடியை இயற்கையாக கருமையாக்குவதற்கான சில இயற்கையான ஹேர்டை பற்றி பார்ப்போம்..
பாதாம், காப்பர், மெலனினை உற்பத்தி செய்கிறது. இதனால் நரைமுடி ஏற்படுவது குறையும். பாதாமை முதல் நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
அரைத்த பேஸ்ட்டை வடிக்கட்டி சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். தலைமுடியை ஷாம்பு வைத்து அலசிய பின்னர், வடிக்கட்டிய பாதாம் சாறை உங்கள் தலையில் தேய்த்து 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். இதையடுத்து, 15 நிமிடம் கழித்து முடியை அலசவும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பிளாக் காஃபி
நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு காபி பழமையான வீட்டு வைத்தியமாகும். 2 கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து 5 டீஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். அதன் பின் தலைமுடியில் தடவவும். அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியை அலசவும்.
இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.