நரை முடியை இயற்கையாகவே கருமை நிறத்தில் மாற்ற டிப்ஸ் இதோ...!
ஒருவருக்கு வயதாகிறது என்பதன் முதல் அறிகுறி முடி நரைக்கத் தொடங்குவது வைத்து தான் கணக்கிடப்படுகிறது. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் இளம் வயதினரையும் இத்தகைய நரை முடிகள் தொல்லைக் கொடுக்கின்றன. இதனால் முடியை கருமையாக மாற்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஹேர்டை முதல் பெர்மனென்ட் ஹேர் கலரிங், விக் என்று பல்வேறு தயாரிப்புகள்பயன்பாட்டில் உள்ளது.
ஒரு சிலருக்கு மன அழுத்தம் காரணமாக இளம் வயதிலேயே முடி நரைக்கத் தொடங்கும். ஒரு சிலருக்கு அவர்களின் பரம்பரை அல்லது டிஎன்ஏ கூறுகள் காரணமாக முடி நரைக்கலாம். இவை அல்லாமல், போதிய உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் வயதாகும் அறிகுறிகள் தோன்றலாம்.
வைட்டமின் பி12 உடலில் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் முக்கிய வைட்டமின் ஆகும். வைட்டமின் குறைபாடு இருந்தால் தலைமுடிக்கு, வேர்களுக்கு ரத்தம் சரியாக பாயாமல் இருந்தாலும், முடி நரைக்கத் தொடங்கும்.
- தேங்காய் எண்ணெயில் கருவேப்பிலையை சேர்த்து தினமும் முடியில் தலையில் தடவி வரலாம். தேங்காய் எண்ணெய் முடிக்கு ஊட்டமளிக்கும், கருவேப்பிலை கூந்தலின் நிறத்தை கருமையாக மாற்ற உதவும்.
- மருதாணி நரைமுடிக்கு தீர்வாக அமைவதோடு மட்டுமல்லாமல் கூந்தலையும் ஆரோக்கியமாக்கும். மருதாணியோடு முட்டையை சேர்த்து தடவும் போது உங்கள் கூந்தல் அதிக வலுப்பெறும்.
- வெங்காயத்தில் இருக்கும் நுண்-ஊட்டச்சத்துகள் முடிக்கு ஊட்டம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நரை முடியை கருமையாக்கவும் உதவுகிறது. இதனை எலுமிச்சை சாறுடன் கலந்து பயன்படுத்தலாம்.