பல் மஞ்சளா இருக்கா? இப்படி செஞ்சு பாருங்க.. ஒரே வாரத்தில் பளிச்சிடும்!
பற்களின் நீங்காத மஞ்சள் கறைகளை அகற்ற சில டிப்ஸ்களை பார்ப்போம்.
நீங்காத மஞ்சள்
புகைபிடித்தல், தேநீர் மற்றும் காபி உட்கொள்ளும் பழக்கம் மற்றும் மரபணு காரணிகளால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறக்கூடும். பல் துலக்கும் போது சிறிது பேக்கிங் சோடாவை பேஸ்ட் மீது தூவி தேய்க்கவும்.
இப்படி வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து வாருங்கள். பேக்கிங் சோடா பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்கிவிடும்.
பல் பாதுகாப்பு
ஸ்ட்ராபெர்ரியை நசுக்கி, அதை பேஸ்டுடன் கலந்து பற்களில் தடவவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்கலாம். எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்தோலை பற்களில் தேய்க்கலாம். வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை இதைச் செய்யுங்கள்.
பல் துலக்கும்போது பேஸ்டுக்கு பதில் ஆரஞ்சு தோல் தூளை பிரெஷில் தடவி தேய்க்கலாம்.
ஒரு டீஸ்பூன் உப்புடன் சில துளிகள் எண்ணெய் கலந்து பிரெஷ் பயன்படுத்தி பற்களில் ஒரு வாரம் தேய்க்கவும். நல்ல வித்தியாசம் தெரியும்.