தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் - பாதுகாப்பில் தீவிரம் காட்டும் போலீசார்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொதுக்கூட்டத்திற்காக தமிகத்திற்கு வருகை தர உள்ளார், அதனால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பொதுக்கூட்டம்
பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆனதையொட்டி மத்திய அரசின் சாதனைகளை விளக்க நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.
இது தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற வேண்டும் என்று தீர்மானித்து பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.
அதன்படி மதுரையில் சில நாட்கள் முன்பு கூட்டம் நடைபெற்றது. தற்போது வரும் 8-ம் தேதி வேலூரில் மத்திய அரசு சாதனை விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்க்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தர உள்ளார்.
பாஜக
இந்நிலையில், வேலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் தீவிரமாக வேலைகளை செய்து வருகிறார்கள்.
நிகழ்ச்சி அன்று கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா ஹெலிகாப்டரில் வேலூரில் உள்ள கந்தனேரியில் வந்து இறங்க உள்ளார்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர் 8-ம் தேதி அன்று மாலை 3.30 மணி அளவில் வந்து கலந்துகொண்டு பிறகு 4.45 மணியளவில் விசாகபட்டினம் கிளம்ப உள்ளார்.
மேலும், கந்தனேரியில் நிகழும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாஜக நிர்வாக குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.