ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க நாங்கள் வலியுறுத்தமாட்டோம் - அமித் ஷா பரபர பேட்டி
ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க நாங்கள் வலியுறுத்தமாட்டோம் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்
அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு அதில், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையமும் அவரை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி,கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினர். அதன்பின், கூட்டணி குறித்து பேசியதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் எனவும் ஈபிஎஸ் தெரிவித்தார்.
அமித் ஷா பேட்டி
இந்நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே உள்ள பிரச்சினையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஓபிஎஸ்-ஐ சேர்க்க நாங்கள் வலியுறுத்த மாட்டோம். அது அக்கட்சியின் விவகாரம்.
ஒரு கட்சியின் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே விரும்பியது இல்லை. அதனை தரக்குறைவான செயலாகவே கருதுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.