மோசமடைந்த சூழல்..பாகிஸ்தானில் முழு ஊரடங்கு - வெளியான அதிர்ச்சி தகவல்!

Pakistan World
By Vidhya Senthil Nov 16, 2024 12:57 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

 பாகிஸ்தானில் காற்றின் தரம்  மோசமடைந்தால் நவம்பர் 16, 17 இந்த முழு ஊரடங்கு  அறிவிக்கபட்டுள்ளது.

காற்றின் தரம் 

டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மோசமடைந்த சூழல்..பாகிஸ்தானில் முழு ஊரடங்கு - வெளியான அதிர்ச்சி தகவல்! | Holiday Been Declared Pakistan Till November 24

அந்த வகையில் ,பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று தரக்குறியீடு இதுவரை இல்லாத வகையில் சாதனை பதிவாக, 1,600 என்ற அளவில் உயர்ந்து உள்ளது. காற்றின் தரம் மோசமடைந்து உள்ள சூழலில், பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ரூ.6000 கோடி மதிப்பில் 36 மாடிகள், ஜிம்; இந்தியாவின் விலையுயர்ந்த வீடு - யாருடையது தெரியுமா?

ரூ.6000 கோடி மதிப்பில் 36 மாடிகள், ஜிம்; இந்தியாவின் விலையுயர்ந்த வீடு - யாருடையது தெரியுமா?

அதன்படி, நவம்பர் 17ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. காற்றின் தரம் மேலும் மோசமடைந்தால் கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கு கடுமையான தடை விதிக்கப்படும்  என அறிவிக்கப்பட்டது.

விடுமுறை

இந்த நிலையில், புகைமூட்டம் மற்றும் குறைவான தொலைவையே பார்க்க கூடிய சூழல் நிலவுவதால், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் வரும் நவம்பர் 24ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மோசமடைந்த சூழல்..பாகிஸ்தானில் முழு ஊரடங்கு - வெளியான அதிர்ச்சி தகவல்! | Holiday Been Declared Pakistan Till November 24 

நவம்பர் 16, 17 இந்த முழு ஊரடங்கு தொடரும். வருகிற திங்கள் நவம்பர் 18 முதல் 3 நாட்களுக்கு நிலைமை கண்காணிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.