வெளுத்து வாங்கிய கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
கனமழை
வடகிழக்கு பருவமழை காரணமாக, பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், அடையாறு, கோட்டூர்புரம், ராயபுரம், கிண்டி, தரமணி, சாந்தோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
எனவே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (25.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு வாக்காளர் பயிற்சி முகாம் இன்று நடைபெற இருப்பதால் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.