கொட்டப்போகும் கனமழை - உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!

Department of Meteorology
By Thahir Oct 18, 2023 08:55 AM GMT
Report

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

A low pressure area is formedகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

இதனையடுத்து, 21ம் தேதி மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை 

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்து வருகிறது.

A low pressure area is formed வெளுத்து வாங்கும் கனமழை

அதன்படி, தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

11 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

11 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.