வாடகைக்கு ஆண் நண்பர்கள் - மனம்விட்டு பேச புதிய அப்!

Relationship Mumbai Friend
By Sumathi Sep 27, 2022 11:24 AM GMT
Report

ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கும் டாய்பாய் எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 ஆண் நண்பர்கள்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கலாச்சாரங்களில் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. இதில் அதிக நிறைகள் காணப்பட்டாலும், குறைகளும் கட்டாயம் உண்டு. அதன் அடிப்படையில், வாட்ஸ் அப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் என பல அப்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வாடகைக்கு ஆண் நண்பர்கள் - மனம்விட்டு பேச புதிய அப்! | Hire Boyfriends In Bengaluru

இவை பெரிதும் உறவுகளிடம் உரையாடவே பயன்படுத்தப்படுகிறது. நமது நிறை, குறைகளை ஷேர் செய்ய எப்போதும் நாம் முதலில் நாடுவது நம் நண்பர்களைதான். அனைவரது வாழ்விலும் நண்பர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே.

 டாய்பாய் 

இந்நிலையில் தான், பெங்கலூரில் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கும் டாய்பாய் எனும் அப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப் மூலம், அவருடன், அவர்கள் சினிமா, கோவில், உணவகம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லலாம்.

வாடகைக்கு ஆண் நண்பர்கள் - மனம்விட்டு பேச புதிய அப்! | Hire Boyfriends In Bengaluru

பெண்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக இந்த அப் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு டாய்பாய் போர்ட்டலுக்கான ஏபிகே ஃபைலை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயன்பாடு Google Play store இல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.