உயிரோடு பெண்ணின் உடல் முழுவதும் தோலை உரித்து கொன்ற கொடூரம்!
பெண் ஒருவர் மர்ம கும்பலால் தலையையும், மார்பகங்களையும் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்து பெண்
பாகிஸ்தானின், சிஞ்சோரோ நகரைச் சேர்ந்தவர் தயா பேல் (40). இந்து மதத்தைச் சேர்ந்த இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்துவிட்டார். 4 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, தயா பேல் திடீரென காணாமல் போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், ஊர் எல்லையில் உள்ள ஒரு வயல்வெளியில் தயா பேலின் உடல் கண்டறியப்பட்டது. மேலும், அவரது தலை துண்டிக்கப்பட்டும், மார்பகங்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கொடூர கொலை
உடல் முழுவதும் தோல்களும் உரிக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையில், தயா பேலின் தலை துண்டிக்கப்படுவதற்கு முன்பாக, அவர் உயிருடன் இருக்கும் போதே, கொலையாளிகள் அவரது உடல் முழுவதும் உள்ள தோலை அப்படியே உரித்து எடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவுக்கு சித்ரவதை செய்து கொலை செய்யும் அளவுக்கு தயா பேலுக்கு எதிரிகள் யாரும் இல்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.