நிதி நிறுவனத்தில் ரூ.30லட்சம் கொள்ளை - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மர்ம கும்பல்!
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதி நிறுவனம்
சென்னை, அரும்பாக்கத்தில் நடந்த வங்கி கொள்ளை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து மேலும் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. வடபழனியில், மன்னார் முதலி தெருவில் ஓசோன் கேபிட்டல் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.
இதை சரவணன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நபர்களுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த நிறுவனத்தில் பண பிழக்கம் அதிகமாக இருந்துள்ளது.
30 லட்சம் கொள்ளை
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 8பேர், முகமூடி அணிந்து கொண்டு வந்து அந்த நிதி நிறுவனத்தில் இருந்த ஊழியர்களை கட்டிப்போட்டு அங்கிருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 7 பேரை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிர விசாரணை
இவர்களைத் தேடுவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை தேடி ஆந்திரா, திருச்சி, ஆகிய இடங்களுக்கு தனிப்படை விரைந்துள்ளது.
பிடிபட்ட செய்யது ரியாஸ் இக்பால் என்பவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.