Wednesday, May 7, 2025

ஆப்பிரிக்காவில் பிரம்மாண்ட இந்து கோவில்;மூலவர் யார் தெரியுமா? வரலாற்றில் ஒரு மைல்கல்!

Festival South Africa
By Sumathi 3 months ago
Report

தென்னாப்பிரிக்காவில் பிரம்மாண்ட இந்து கோவில் திறக்கப்பட்டுள்ளது.

இந்து கோவில் 

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாப்ஸ் அல்லது பிஏபிஎஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற அமைப்பு சார்பில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்து கோவில்கள் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

ஆப்பிரிக்காவில் பிரம்மாண்ட இந்து கோவில்;மூலவர் யார் தெரியுமா? வரலாற்றில் ஒரு மைல்கல்! | Hindu Temple In South Africa Viral Photos

அந்த வரிசையில் தென்னாப்பிரிக்காவில் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் மூலவர் சுவாமி நாராயண். மேலும் ராதா கிருஷ்ணன், ராமர்-சீதை மற்றும் சிவன்-பார்வதி போன்ற தெய்வங்களின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

கோடீஸ்வரர் ஆகப்போவது இந்த ராசிக்காரர்கள்தான் - பாபா வாங்கா கணித்துள்ளாரா?

கோடீஸ்வரர் ஆகப்போவது இந்த ராசிக்காரர்கள்தான் - பாபா வாங்கா கணித்துள்ளாரா?

BAPS அமைப்பு

இதற்காக முன்னதாக ஒரு பிரமாண்டமான யாத்திரை நடைபெற்றது. அதில் சுவாமி சிலைகள் சடங்குகள் செய்யப்பட்டு தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இங்கு BAPS அமைக்கும் 7-வது இந்து மத கோயில் இது.

south africa

போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS), இந்து மதத்தின் வைஷ்ணவப் பிரிவான ஸ்வாமிநாராயண் சம்பிரதாயத்தின் ஒரு பிரிவு. இது தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்து சமூக மக்களுக்கு ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைந்துள்ளது என பிஏபிஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் பிரம்மாண்ட இந்து கோவில்;மூலவர் யார் தெரியுமா? வரலாற்றில் ஒரு மைல்கல்! | Hindu Temple In South Africa Viral Photos

ஏற்கனவே, இந்த அமைப்பு அபுதாபி, அமெரிக்காவின் நியூ ஜெர்சி என பல்வேறு நாடுகளில் இந்து கோவில்களை கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.