விருது விழாவுக்கு முழு நிர்வாணமாக வந்த பாடகரின் மனைவி - நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
கிராமி விருது விழாவிற்கு பிரபல மாடல் நிர்வாணமாக வந்தததால் திருப்பி அனுப்பட்டுள்ளார்.
கிராமி விருது
இசைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக கிராமி விருது பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் சிறந்த இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 67 வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான கிராமி விருதை சென்னையில் பிறந்து, அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பாடகரான சந்திரிகா டண்டன்(chandrika tandon) பெற்றுள்ளார்.
நிர்வாண உடை
இந்த விழாவிற்கு 24 முறை கிராமி விருது பெற்ற பிரபல பாடகரான கான்யே வெஸ்ட்(kanye west) அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது மனைவி பியான்கா சென்சோரி உடன் விழாவில் கலந்து கொண்டார்.
பியான்கா சென்சோரி(Bianca Censori)மிக மெல்லிதான ஆடை அணிந்து உடல் முழுவதும் வெளியே தெரியும் வகையிலான ஆடை அணிந்து நிகழ்வில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக விழா நிர்வாகம் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளது.
பியான்கா சென்சோரி கிராமி விருது விழாவில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்ததால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.