டிரம்ப்-க்கு எதுவும் ஆகக்கூடாது கடவுளே..சிறப்பு பூஜை செய்து வழிபட்ட இந்து அமைப்பினர்!
டிரம்ப்-க்கு எதுவும் ஆகக்கூடாது என யாகம் வளர்த்து பூஜை செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பூஜை
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
இதனால் அந்நாட்டு தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, அந்நாட்டின் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த தேர்தல் பேரணியின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்தார்.
இந்து அமைப்பினர்
சம்பவத்திற்குப் பிறகு அவரது பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் முகத்தில் இரத்தத்துடன் மேடைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து, டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியை தொடர்ந்து டெல்லியின் இந்து சேனா அமைப்பினர் அவரது நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக 'சிறப்பு ஹோமம்' நடத்தினர்.
டெல்லியில் உள்ள தில்ஷத் கார்டனில் உள்ள மா பக்லமுகி சாந்தி பீடத்தில், 1.25 லட்சம் புனித மஹாமிருத்யுஞ்சய் மந்திரத்தை உச்சரிக்கும் மகாமிருத்யுஞ்சய் ஜப ஹோம யாகத்தை பூசாரிகள் நடத்தி உள்ளனர். இந்த மந்திரம் நோயை குணப்படுத்தி, தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கும் பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
இது குறித்து இந்து சேனாவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், முன்னாள் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து தங்களுக்கு கவலைகள் இருப்பதாகவும், அவருக்கு உதவ தெய்வீக தலையீடு தேவை என்றுதெரிவித்துள்ளார்.