இந்து மத காலேஜ் பெண்கள் ஜிம்முக்கு போக வேண்டாம் - எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
எம்.எல்.ஏ ஒருவர் இந்து பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து பெண்கள்
மகாராஷ்டிரா, சாங்லி மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கோபிசந்த் படல்கர். இவர் கல்லூரிக்கு செல்லும் இந்து பெண்கள் வீட்டிலேயே யோகா செய்ய வேண்டும்.
உடற்பயிற்சிக்காக ஜிம்முக்கு செல்லும்போது, அங்குள்ள பயிற்சியாளர் வேறு மதத்தை சேர்ந்தவராக இருக்கலாம். இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியாது.
சர்ச்சை பேச்சு
எனவே, இந்து பெண்கள் ஜிம்முக்கு செல்வதை தவிர்த்துவிட்டு, வீட்டிலேயே யோகா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) தலைவர் சுப்ரியா சுலே,
"சிவசேனா எம்.எல்.ஏ. பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேசுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கொரோனா காலத்தில், அதார் பூனாவாலாவின் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை எம்.எல்.ஏ. எதிர்க்கப் போகிறாரா?
அல்லது டாடா நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை புறக்கணிப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.