எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ.. அங்கெல்லாம் மொழி திணிப்பு - அன்பில் மகேஷ் காட்டம்!

Smt Tamilisai Soundararajan Tamil nadu Anbil Mahesh Poyyamozhi trichy
By Swetha Oct 21, 2024 06:20 AM GMT
Report

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்தி மொழி திணிக்கப்படுகிறது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ் 

திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை நடத்திய சமூக நல்லிணக்க மீலாது மாநாடு நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையா? மும்மொழிக் கொள்கையா? என தமிழிசை சௌந்தரராஜன் என்னை பார்த்து கேள்வி கேட்கின்றார்.

எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ.. அங்கெல்லாம் மொழி திணிப்பு - அன்பில் மகேஷ் காட்டம்! | Hindi Is Imposed In Every Chance Says Anbil Mahesh

இது கழகத்தின் பொய்மொழி கொள்கையா? என்பதை பொய்யாமொழி அவர்கள்தான் விளக்க வேண்டும் என்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.சிறுபான்மையினரை மட்டுமல்ல, சிறுபான்மையினர் பேசும் மொழிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

அதை உணர்ந்துதான் உருது மொழி எங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றதோ அந்த அரசு பள்ளிக்கு சென்று அன்பில்' என்னும் எனது பெயரை உருது மொழியில் எழுதினேன். சிறுபான்மையினருக்கு கழக அரசு அரணாக உள்ளது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ள முடியுமா?

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி எப்போது? அன்பில் மகேஷ் ஒபன்டாக்!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி எப்போது? அன்பில் மகேஷ் ஒபன்டாக்!

மொழி திணிப்பு 

சிறுபான்மையினரின் உடமைகளை மட்டுமல்ல அவர்கள் உயிராக கருதக்கூடிய அவர்களின் உருது மொழியையும் காக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது என்பதை நாங்கள் நன்கு அறிந்து உள்ளோம். உருது மொழி கற்கும் அனைத்து மாணவர்களும் உருது மொழியில் கல்வி கற்கிறார்கள் என்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது.

எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ.. அங்கெல்லாம் மொழி திணிப்பு - அன்பில் மகேஷ் காட்டம்! | Hindi Is Imposed In Every Chance Says Anbil Mahesh

மொழியை ஒரு காரணமாக வைத்து உருது மொழி கல்வி கிடைக்கவில்லை எனும் காரணத்தினால் அவர்கள் கல்வி அமைப்பிலிருந்து வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக உருது மொழி கல்வி நடைபெறுகிறது.

உருது மொழியில் படிக்க "மாணவர்கள் விரும்பினால் அவர்கள் உருது மொழியில் எல்லா பாடங்களையும் படிக்கட்டும். அதற்கு நாங்கள் துணை நிற்கின்றோம்" என சொல்கின்றோம். உருது மொழியை யாரும் திணிக்கவில்லை!

நீங்கள் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்தி மொழியை திணிக்கிறீர்கள். ஆனால் உருது மொழியை யாரும் திணிக்கவில்லை. சிறுபான்மையினர் பேசும் மொழியை நாங்கள் பாதுகாப்போம். என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.