செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி எப்போது? அன்பில் மகேஷ் ஒபன்டாக்!

V. Senthil Balaji Tamil nadu Anbil Mahesh Poyyamozhi
By Swetha Sep 28, 2024 02:27 AM GMT
Report

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி குறித்து அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் பதவி

திருச்சியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கட்டிடப் பொறியாளர்கள் சங்கப் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி எப்போது? அன்பில் மகேஷ் ஒபன்டாக்! | Anbilmahesh Senthilbalaji Ministery Responsibility

7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 18,000 வகுப்பறைகள், சுற்றுப்புறச் சுவர்கள், கழிவறைகள், ஆய்வறைகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடங்களை கட்டித் தரும் பொறியாளர்களின் கோரிக்கைளுக்கு மதிப்பளித்து,

அவர்களின் கோரிக்கையை முதலமைச்சருக்கு எடுத்து கூறுவேன்.தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் கட்டப்படுவதால்தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

பாரத பிரதமர் உடனான தமிழக முதல்வர் சந்திப்பு எப்பொழுதும், 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். ஆனால் இன்று, 45 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்று உள்ளது.பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி தொடர்பாக மாதாமாதம் அதிகாரிகள் மத்திய அரசின் அதிகாரிகளை சந்தித்து வந்தார்கள்.

தியாகம் செய்தா சிறைக்கு சென்றார் செந்தில் பாலாஜி? அவர்களை எதில் சேர்ப்பது..சீமான் கேள்வி!

தியாகம் செய்தா சிறைக்கு சென்றார் செந்தில் பாலாஜி? அவர்களை எதில் சேர்ப்பது..சீமான் கேள்வி!

 அன்பில் மகேஷ்

நான் இரண்டு முறை துறையின் அமைச்சரை சந்தித்துள்ளேன். இந்நிலையில், இன்று முதலமைச்சர் நேரடியாகவே சென்று பிரதமரை சந்தித்துள்ளார். தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்கிற அழுத்தத்தை பிரதமருக்கு வழங்கியுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி எப்போது? அன்பில் மகேஷ் ஒபன்டாக்! | Anbilmahesh Senthilbalaji Ministery Responsibility

பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும் காக்கும் விதமாகவும், வேறு வேறு காரணங்கள் கூறாமல், மத்திய அரசு, தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும்.

செந்தில் பாலாஜியை, 471 நாள் சிறையில் வைத்திருந்ததற்கு நீதிமன்றமே அமலாக்க துறையை கண்டித்து உள்ளது. அமலாக்கத்துறை அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் கட்சியை வளர்த்து விடுவார் என்பதற்காக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

அவர்கள் இதுபோன்று செய்யக்கூடாது என்பதற்காக தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு தெளிவாக்கியுள்ளது. நாளை நடைபெறும் பவள விழாவில் செந்தில் பாலாஜி நிச்சயம் கலந்து கொள்வார். அமைச்சராக பங்கேற்பாரா என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளனர்.