விண்வெளியில் இருந்து பார்த்தால் இமயமலை இப்படித்தான் இருக்கும் - த்ரில்லான ஃபோட்டோஸ்
இமயமலை விண்வெளியிலிருந்து தெரிவது போன்ற புகைப்படம் சமுக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இமயமலை
'வேர்ல்ட் அண்ட் சயின்ஸ்" என்ற எக்ஸ் பக்கத்தின் மூலம் சில புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த படங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அமெரிக்க விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்டது.
இந்த படம் 1 லட்சத்து 30 ஆயிரம் பார்வையை பெற்றுள்ளது. இதை விசாரிக்க ஆரம்பித்தபோது, இந்த படங்கள் மிகவும் பழமையானது என்று தெரியவந்தது. மேலும் இந்த படம் 2012ஆம் ஆண்டு மே மாதம், விண்வெளி வீரர் டான் பெட்டிட் இந்த காட்சியை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து படம் பிடித்துள்ளார்.
வைரல் க்ளிக்ஸ்
இதில் இமயமலையின் பனி மூடிய சிகரங்களும், இமயமலையின் பல நூறு கிலோமீட்டர்கள் வரை தெரிகிறது. மேலும் திபெத் பீடபூமி மற்றும் பல ஏரிகளும் படத்தில் காட்சியளிக்கிறன. கங்கை நதி மற்றும் அதன் பகுதி, உயரமான பனிப்பாறைகள், சமவெளியின் முக்கிய ஆறுகள் படத்தில் காணப்படுகின்றன.
இந்த படங்களைப் படம்பிடித்த லென்ஸ் 16 மில்லிமீட்டர் குவிய நீளத்தை கொண்டது. இது மனிதக் கண்ணின் குவிய நீளமான 25 மில்லிமீட்டருக்கு மிக அருகில் உள்ளது.
இந்த லென்ஸ் மூலம் விண்வெளியில் மனித கண்ணால் எதை பார்க்க முடியமோ,அதைபோலவே காட்சிகள் இந்த படங்களில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபோட்டோஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.