4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் ஸ்டேஷனை நோக்கி விண்ணில் பாய்ந்தது ராக்கெட்!
புதிய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்.
சர்வதேச விண்வெளி நிலையம்
விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை (International Space Station) அமேரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா போன்ற நாடுகள் இனைந்து அமைத்துள்ளது. பூமியிலிருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த விண்வெளி நிலையத்தை,
இந்த நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு தங்கியிருந்து ஆய்வு மணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் இனைந்து அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா விண்வெளி வீரர்களை, விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறார்கள்.
புதிய விண்வெளி வீரர்கள்
கடைசியாக கடந்த மார்ச் 4ம் தேதி விண்வெளி வீரர்களை நாசா அனுப்பியது. அவர்களின் 6 மாத பனிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு மாற்றாக புதிய விண்வெளி வீரர்களை தற்போது நாசா அனுப்பியுள்ளது.
அதன்படி நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா மற்றும் டென்மார்க்கை சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் பால்கன்-9 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
அதனை தொடர்ந்து, டிராகன் விண்கலம் சுற்றுப்பாதையில் நுழைந்தது. அந்த விண்கலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என்று நாசா தெரிவித்துள்ளது.