பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து - 4 பேர் பலி!

Himachal Pradesh Death
By Sumathi Jun 21, 2024 05:09 AM GMT
Report

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

 பேருந்து  விபத்து 

இமாச்சல பிரதேசம், ஜுப்பால் என்ற பகுதியில் சாலையில் மலைப்பாதையில் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

himachal pradesh

இதில், பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் 5 பயணிகள் உள்பட மொத்தம் 7 பேர் இருந்துள்ளனர். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர்.

அரசு பேருந்து கவிழ்ந்து கோர விபத்து; 25 பேர் படுகாயம் - ஒருவர் பலி!

அரசு பேருந்து கவிழ்ந்து கோர விபத்து; 25 பேர் படுகாயம் - ஒருவர் பலி!

4 பேர் பலி

5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து - 4 பேர் பலி! | Himachal Pradesh Bus Turns In Valley 4 Killed

இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.