போதையில் ஓட்டுநர்; பள்ளி மாணவர்கள் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து- 5 பேர் பலி!

Accident School Incident Haryana
By Swetha Apr 11, 2024 07:28 AM GMT
Report

பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்தில்15 மாணவர்கள் படுகாயம், 5 மாணவர்கள் உயிரிழப்பு.

கோரவிபத்து

ஹரியாணா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள கனினா கிராமம் அருகே இன்று காலை தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அப்போது, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயற்சித்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

போதையில் ஓட்டுநர்; பள்ளி மாணவர்கள் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து- 5 பேர் பலி! | Haryana School Bus Accident Killed 5 Students

அதில், 4ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 40 மாணவர்கள் இருந்துள்ளனர். இந்த விபத்தில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 மாணவர்கள் படுகாயமடைந்தது தெரியவந்துள்ளது.இவர்களை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள வெவ்வேறு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பள்ளி பேருந்து மோதி கோர விபத்து - 9 பேர் பரிதாப பலி!

பள்ளி பேருந்து மோதி கோர விபத்து - 9 பேர் பரிதாப பலி!

போதையில் ஓட்டுநர்

ரமலான் பண்டிகையான இன்று அரசு விடுமுறையாக இருப்பினும் சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி வழக்கம்போல் இயங்கியுள்ளது. இச்சூழலில் பள்ளிக்கு மாணவர்கள் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

போதையில் ஓட்டுநர்; பள்ளி மாணவர்கள் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து- 5 பேர் பலி! | Haryana School Bus Accident Killed 5 Students

இந்நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், பள்ளிப் பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக குற்றம் சாட்டினர். இது குறித்து பேசிய அம்மாநிலத்தின் கல்வித் துறை அமைச்சர், "துணை ஆணையர் மற்றும் மகேந்தர்கர் காவல் கண்காணிப்பாளரிடம் பேசியுள்ளேன்.

மாணவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்கு போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.