மேக்கப் மட்டும் இல்லாம கங்கனா ரனாவத்தா பார்த்த.. காங்கிரஸ் MLA சர்ச்சை பேச்சு!
இமாச்சலப் பிரதேச மாநிலச் சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெகத் சிங் கங்கனா ரனாவத்தை விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல்
இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ,வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் 153 பேர் பலியாகினர்.மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடத்தை இழந்து தவித்து வந்தனர்.
இந்நிலையில் மாண்டி மக்களவைத் தொகுதியின் எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் தனது தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநில சட்டசபையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஜெகத் சிங்,'' மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பிய பிறகு கங்கனா ரனாவத் வந்துள்ளார்.
சர்ச்சை பேச்சு
இமாச்சலப் பிரதேசத்துக்குக் கனமழை எச்சரிக்கை விடுத்தபோதோ, மாண்டி தொகுதியில் 9 பேர் பலியானபோதோ அவர் வரவில்லை. அப்போது வந்திருந்தால் மழை பெய்யும்போது மேக்கப் கரைந்துவிடும் என நினைத்து அவர் வராமல் இருந்து இருக்கலாம்.
மேலும் மேக்கப் இல்லாமல் வந்தால் அது கங்கனா ரனாவத்தா? இல்லை அவரது தாயா? என்பதை கண்டுப்பிடிக்க முடியாது. தற்போது நிலைமை சரியான பிறகு வந்து முதலைக் கண்ணீர் வடிக்கிறார்'' எனக் கூறினார். காங்கிரஸ் எம்எல்ஏ ஜெகத் சிங் நேகியின் இந்த பேச்சு தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.