பேரதிர்ச்சி: 37 ஆண்டுகளாக அழுகிப்போகாத மனித சடலம் - யார் அவர், என்ன காரணம்?
37 ஆண்டுகளாக பனிக்குள் புதைந்திருந்த சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உருகிய பனி
தென்மேற்கு சுவிட்சர்லாந்தில், புகழ்பெற்ற சிகரம் மேட்டர்ஹார்ன். இங்கு துளி கூட அழுகிப் போகாமல் பனிப்பாறையில் மனித சடலம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
டிஎன்ஏ சோதனையில் அது 37 ஆண்டுகளுக்கு முன்பு அங்குக் காணாமல் போன ஜெர்மன் நாட்டை சேர்ந்தவரின் சடலம் என்பது தெரியவந்துள்ளது.
மனித சடலம்
இத்தாலிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பனியால் சூழப்பட்ட தியோடுல் மலையில் சில மலையேற்ற வீரர்கள் ஏறும் போது, இவரது உடலைக் கண்டுபிடித்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்படி சடலம் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
புவி வெப்ப மயமாதல் காரணமாக இதுபோல பல இடங்களில் பனிப்பாறை உருகுவது அதிகரித்து வருகிறது. அதன் மூலம்தான் சடலம் வெளியே தெரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.