URGENT MAKE AN ACCIDENT...இது என்ன புதுசா இருக்கே - வைரலாகும் எச்சரிக்கை பலகை!
நெடுஞ்சாலை எச்சரிக்கை பலகை ஒன்று இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
புதுசா இருக்கே..
கர்நாடகாவில் நெடுஞ்சாலை சார்பில் நிறுவப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை ஒன்றில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கர்நாடகாவின் குடகு அருகே நெடுஞ்சாலை சார்பில் நிறுவப்பட்டுள்ள வழிகாட்டி பலகை கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது. அதில், "அவசரவே அபகதக்கே கரனா" என்ற கன்னட சொற்றொடரின் தவறான மொழிபெயர்ப்பாக ஆங்கிலத்தில் "அவசரமாக ஒரு விபத்தை உண்டாக்குங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.
எச்சரிக்கை பலகை
இதன் உண்மையான மொழிபெயர்ப்பு "அதிக வேகமே விபத்துகளுக்கு காரணம்" ஆகும். இந்த புகைப்படத்தை கொடகு கனெக்ட் என்ற பயனர் வெளியிட்டுள்ள இந்த பதிவு வைரலாகியதில் நெட்டிசன்கள் பலரும் அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Lost in translation.
— Kodagu Connect (@KodaguConnect) July 2, 2024
Location: Near Sampaje. Along Madikeri to Mangaluru National Highway 275. @NHAI_Official pic.twitter.com/i2k7NLQdaL
அதில் ஒரு பயனர், இதற்கும் கூட chatgpt-ஐ பயன்படுத்துக்கள் என்றும் மற்றொருவர் "அவசரத்திற்குப் பிறகு ஒரு கமா வைத்தால் பொருள் முற்றிலும் மாறும்" என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.