எந்த ரயிலால் இந்திய ரயில்வேக்கு அதிக வருமானம் தெரியுமா?
அதிக வருவாய் ஈட்டும் ரயில் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அதிக வருவாய்
இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் ரயில்வேக்கு பல்வேறு வழிகளில் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக பெங்களூரு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தான் ரயில்வேக்கு அதிக வருவாய் ஈட்டும் ரயிலில் முன்னணியில் உள்ளது.
டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையம் மற்றும் கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டி ஜங்ஷன் ஆகியவற்றிற்கு இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது. இரண்டாவது அதிக வருமானம் ஈட்டும் ரயில் சிலாய்தா ராஜதானி எக்ஸ்பிரஸ்.
இந்திய ரயில்வே
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவையும், தேசிய தலைநகரான புது டெல்லியுடன் இந்த ரயில் இணைக்கிறது. திப்ருகரின் ராஜதானி ரயில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
தேசிய தலைநகரான புது டெல்லி மற்றும் அசாமில் உள்ள திப்ருகர் இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.1,26,29,09,697 வருவாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.