இந்தியர்களை அதிகம் வெளியேற்றிய நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்ல..
2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 81 நாடுகளிலிருந்து 24,600-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் வெளியேற்றம்
சவூதி அரேபியா 11,000-க்கும் அதிகமான இந்தியர்களைத் திருப்பி அனுப்பி முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை,

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக 3,800 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். வளைகுடா நாடுகளைத் தொடர்ந்து
மியான்மர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் அதிகப்படியான இந்தியர்களை நாடு கடத்தியுள்ளன.
மேலும் விசா விதிகளை மீறியதற்காக பிரிட்டன் அதிக அளவிலான இந்திய மாணவர்களை வெளியேற்றியுள்ளது. இதற்கெல்லாம் காரணமாக முறையான ஆவணங்கள் இல்லாமை மற்றும் உள்ளூர் சட்டங்களை மீறுவதே கூறப்படுகிறது.