அப்படியே சரியப்போகும் தங்கம் விலை - இந்த நாட்டால் நடக்கப்போகும் மாற்றம்
தங்க வயல் ஒன்றை, சீனா கண்டுபிடித்துள்ளது.
தங்க வயல்
சீனாவின் மத்திய ஹுனான் மாகாணத்தில் மாபெரும் தங்கப் புதையல் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 1,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான தங்கம் இருக்கலாம். இதன் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் கோடி.

இந்த தங்கத்தை சீனா வெட்டி எடுப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. காரணம் இது மிகவும் ஆழமான பகுதியில் இருக்கிறது. 2-3 கி.மீ ஆழத்தில் இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விலை குறையுமா?
வெட்டி எடுத்தாலும் ஆண்டுக்கு 15-30 டன் தங்கத்தை மட்டுமே வெட்டி எடுக்க முடியும். ஆனால் ஓர் ஆண்டுக்கு உலகம் முழுவதும் சுமார் 3600 டன் தங்கம் தேவை.
மொத்த தேவையில் வெட்டி எடுக்கும் தங்கத்தின் அளவு வெறும் 1-3% தான். இப்படி எடுக்கப்பட்ட தங்கத்தை சீனா, வெளியில் விற்பனை செய்யாது. அது தன்னுடைய மத்திய வங்கியில் சேமிப்பாக வைத்துக்கொள்ளும்.
எதிர்காலத்தில் தங்கத்தின் இருப்பை அதிகரிக்கும்போது அந்நாட்டின் கரன்சி மதிப்பு மேலே உயரும். இருப்பினும் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.