Saturday, Jul 12, 2025

போதைப்பொருளுக்கு அனுமதி; மது குடிப்போர் அதிகம்.. ஆனாலும், பாதுகாப்பில் பெஸ்ட் - எந்த நாடு தெரியுமா?

Portugal
By Sumathi 2 years ago
Report

உலகிலேயே அதிக மது அருந்துபவர்கள் நாடாக போர்த்துகல் உள்ளது.

மதுப்பிரியர்கள்

போர்த்துகல் நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் வாரத்திற்குக் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் மது அருந்துகிறார்கள். ஆண்டுக்கு சுமார் 52 லிட்டர் மது அருந்துகிறார்கள். மேலும், போதைப்பொருள் வைத்திருப்பது சட்டப்படி குற்றமில்லை.

போதைப்பொருளுக்கு அனுமதி; மது குடிப்போர் அதிகம்.. ஆனாலும், பாதுகாப்பில் பெஸ்ட் - எந்த நாடு தெரியுமா? | Highest Alcohol Consumption But Safest Country

ஆனால், போதைப்பொருள் வாங்குவதும் விற்பனை செய்வதும் குற்றம். இந்த சட்டம் 2001 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், குற்ற நிகழ்வுகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.

பாதுகாப்பான நாடு

அதிகபட்ச குற்றத்திற்கே இங்கு 25 ஆண்டுகள் தான் தண்டனை வழங்கப்படுகிறது. மரண தண்டனை என்பது கிடையாது. இது உலகின் வளர்ந்த நாடுகளுள் ஒன்றாகவும், பாதுகாப்பான நாடுகள் பட்டியலிலும் உள்ளது.

போதைப்பொருளுக்கு அனுமதி; மது குடிப்போர் அதிகம்.. ஆனாலும், பாதுகாப்பில் பெஸ்ட் - எந்த நாடு தெரியுமா? | Highest Alcohol Consumption But Safest Country

இங்கு, பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. உலகின் பழமையான தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பழமையான கிபி 1732 இல் தொடங்கப்பட்ட புத்தகக் கடைகளும் இங்கு உள்ளன. அமைதியான நாடுகள் பட்டியலில் போர்த்துகல் நான்காவது இடத்தில் உள்ளது. கல்வியறிவு விகிதம் 97 சதவீதமாக உள்ளது.