பூமிக்கடியிலிருந்து பம்பில் அடிக்க.. அடிக்க.. வந்த சாராயம்... - அதிர்ந்து போன போலீசார் - வைரலாகும் வீடியோ

Viral Video Madhya Pradesh
By Nandhini Oct 12, 2022 12:09 PM GMT
Report

அடிபம்பில் வந்த சாராயம்

சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மத்தியப் பிரதேசம், பன்புரா கிராமத்தில் ஒருவர் மண்ணுக்கடியில் டிரம் வைத்து அதில் கள்ளச்சாராயத்தை நிரப்பியுள்ளார். மதுபானம் இருந்த டிரம் மீது கை பம்பை வைத்து பூமியில் புதைத்துள்ளார். மது அருந்துபவர்களுக்கு யாருக்கும் தெரியாமல் பம்ப் மூலம் கள்ளச்சாராயத்தை வழங்கி வந்துள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரை அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர், போலீசார் கம்ப்பை அடித்து பார்த்தபோது, தண்ணீருக்குப் பதிலாக சாராயம் வந்தது உறுதியானது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், Inspired by வெட்டுப்புலி liquor service... என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

madhya-pradesh-viral-video