அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. உயர்கல்வி செலவு - தமிழக அரசு அறிவிப்பு

M K Stalin Tamil nadu Governor of Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi
By Swetha Dec 24, 2024 03:03 AM GMT
Report

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவு குறித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு..

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இந்தியாவில் செயல்பட்டுவரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேருவோருக்கு ஏற்படும் கல்விச் செலவினையும் அரசே முழுமையாக ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. உயர்கல்வி செலவு - தமிழக அரசு அறிவிப்பு | Higher Education Fees For All Govt School Students

இந்த நிலையில், அது பற்றிய அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட பதிவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இனி பள்ளிகளில் ‘ஆல் பாஸ்’ முறை ரத்து? அதிர்ச்சி அளிக்கும் மத்திய அரசு

இனி பள்ளிகளில் ‘ஆல் பாஸ்’ முறை ரத்து? அதிர்ச்சி அளிக்கும் மத்திய அரசு

தமிழக அரசு

நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார். அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. உயர்கல்வி செலவு - தமிழக அரசு அறிவிப்பு | Higher Education Fees For All Govt School Students

அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும். மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இவ்வரசே ஏற்றுக்கொள்ளும்.

இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி

வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.